ஞாயிறு, 13 ஜூலை, 2014

நமதூர் (மேலத்தெரு) மையத்தாங்கொள்ளை

நமதூர் (மேலத்தெரு) மையத்தாங்கொள்ளை வாயிலில் நயவஞ்சகமாகவும், தான்தோன்றிதனமாகவும் வைக்கப்பட்டிருக்கம் கல்வெட்டின் வாசகங்களை வன்மையாக கண்டிக்கிறேன். இதனை எதிர்த்து கேட்காத கையாலாகாதவர்களை நினைத்து வேதனையடைகிறேன். 
வல்ல அல்லாஹ் இவர்களுக்கு ஹிதாயத் வழங்கட்டும் அல்லது அவனது சாபம் உண்டாகட்டும். ஆமீன்.

திங்கள், 24 ஜூன், 2013

‘பராஅத் இரவு’

ஷஃபான் மாதம் 15ம் பிறை ‘பராஅத் இரவு’ என்று அனுஷ்டிக்கப்பட்டு இல்லாத பொல்லாத பல காரியங்கள் இன்று மார்க்கம் என்ற பெயரில் அப்பாவி முஸ்லிம்களுக்கு மத்தியில் அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த ‘பராஅத் இரவு’ என்றால் என்ன? இதனுடைய உண்மை நிலை என்ன? என்பது பற்றி தூய்மையான இஸ்லாத்தின் தகவல்களை இவர்களுக்கு வழங்கிட, நேரிய வழியின் பக்கம் வழிகாட்டிட நாம் பொறுப்பு சாட்டப்பட்டுள்ளோம்.
நபி(ஸல்) அவர்கள் ஷஃபான் முழுவதும் நோன்பு நோற்பார்கள் என்று சொல்கிற அளவுக்கு ஷஃபானின் மிக அதிகமான நாட்கள் நோன்பு நோற்பார்கள் என்று ஆயிஷா(ரலி) அவர்கள் கூறுகிறார்கள். நூல் : புகாரி

இவ்வாறாக ஷரீஅத்தில் ஷஃபான் மாதத்திற்கு சிறப்பு சொல்லப்பட்டதை வைத்து இந்த சிறப்பு விஷயத்தில் மக்களை ஆர்வப்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லாஹ்வோ அவனின் தூதரோ சொல்லாத பல பொய்யான தகவல்களை மார்க்கத்தின் பெயரால் பரப்புவதை ஒருபோதும் ஒரு முஸ்லிமால் தாங்கவோ, ஜீரணிக்கவோ இயலாது.

மேலும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஷஃபான் மாதத்தின் நடுபாதி வந்துவிட்டால் ரமளான் மாதத்தை அடைகின்றவரை நீங்கள் நோன்பு வைக்க வேண்டாம். நூல் : திர்மிதி, இப்னுமாஜா
நபி(ஸல்) அவர்கள் சில அவசியமான நோக்கத்திற்காகவே இவ்வாறு அறிவுருத்தியுள்ளார்கள்.
ரமளான் மாதத்திற்கான ஒரு பயிற்சியை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஷஃபான் மாதத்தின் ஆரம்ப நாட்களில் நோன்பு நோற்க ஆர்வப்படுத்தியுள்ளார்கள்.
ரஜப் புனித மாதத்தைத் தொடர்ந்து மக்கள் ரமளான் மாதத்தை மாத்திரமே எதிர்நோக்குவதால் ஷஃபான் மாதத்தின் முக்கியத்துவத்தை கூறினார்கள்.
ரமளான் மாதத்தை எல்லா வகையிலும் எதிர்நோக்க வேண்டும். அதற்காக தயார் ஆகவேண்டும் வேண்டும். ஷஃபான் மாதத்தின் பிந்தைய பாதி நாட்களில் நோன்பு நோற்க தடைவிதித்தார்கள். (இது வாராந்திர திங்கள் மற்றும் வியாழக்கிழமையில் சுன்னத்தான் நோன்பை நோற்பவர்களுக்கோ, மாதத்தின் நடு மூன்று நோன்பை நோற்பவர்களுக்கோ, நேர்ச்சை செய்து நோற்பவர்களுக்கோ பொருந்தாது)

இவ்வாறு இல்லாமல் அல்லாஹ் ‘லைலதுல் கத்ர்’ சம்பந்தமாக சொல்யுள்ள செய்திகளை மற்றும் வசனங்களை கொண்டுவந்து இந்த ஷஃபான் மாதத்தின் 15ம் இரவோடு இணைத்து இந்த நாள்தான் லைலதுல் கத்ர் என்றோ அல்லது அதற்கு நிகரானதுபோன்றோ வாதிடுவது அப்பட்டமான அபத்தம்.

நிச்சயமாக நாம் அதனை பாக்கியமுள்ள இரவிலே இறக்கினோம். நிச்சயமாக (அதன் மூலம்) அச்சமூட்டி எச்சரித்துக் கொண்டே இருக்கின்றோம். அல்குர்ஆன் 44:3
என்ற வசனத்தில் அல்லாஹ் ஷஃபான் மாதத்தின் 15ம் இரவைத்தான் கூறுகின்றான் என்று கூறுவது குர்ஆன் வசனங்களுக்கும் ஹதீஸ்களுக்கும் எதிரானது. லைலதுல் கத்ர் இரவு குறித்து அல்லாஹ் கூறும்போது அது ரமலான் மாதத்தில் தான் உள்ளது என்பதை தெளிவுப்படக் கூறியுள்ளான்.

நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலதுல் கத்ர் என்ற) இரவில் இறக்கினோம்.
அல்குர்ஆன் 97:1

ரமளான் மாதம் எத்தகைய தென்றால் அதில் தான் மனிதர் களுக்கு வழிகாட்டியாகவும், நேரான மறுப்பு வழியை தெளிவாக்கக்கூடியதாகவும் (நன்மை லிதீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான குர்ஆன் இறக்கியருளப்பட்டது. அல்குர்ஆன் 2:185

இவ்வாறு அல்லாஹ் குர்ஆன் அருளப்பட்ட மாதம் ரமலான் மாதம் என்றும் லைலதுல் கத்ர் இரவு ரமலான் மாதத்தில் உள்ள ஒரு நாள் என்றும் மனிதர்களுக்கு விளக்கி விட்டான்.

ஆகவே திருக்குர்ஆனின் 44:3 வசனத்தில், பாக்கியமுள்ள இரவு என்று அல்லாஹ் குறிப்பிடுவது ரமலானில் வரும் லைலத்துல் கத்ர் இரவு தான். ஷஃபான் 15ம் இரவு அல்ல.
ஷஃபான் மாதத்தின் 15ம் பிறையை பராஅத் இரவு என்றோ அல்லது அதுவே லைலத்துல் கத்ர் இரவு என்றோ சொல்லி அந்த இரவில் விஷேச வழிபாடுகள் செய்வது முழுக்க முழுக்க மார்க்கத்திற்கு முரணானதாகும்.
அதற்காக இவர்கள் மேற்கோள் காட்டுகின்ற அத்தனை செய்திகளும் பலவீனமானவையாகும். குறிப்பாக ஷஃபான் மாதத்தின் 15ம் பிறை இரவுபராஅத் தொழுகை என்று சொல்லி நூறு ரக்அத்கள் தொழுவது, பாவமன்னிப்புக்கு, ஆயுள் நீட்டித்தரப்பட, செல்வம் பெருக என்ற நிய்யத்தில் அந்த இரவில் மூன்று யாசீன் ஒதுவது, பிரத்யேக துஆக்களை ஓதுவது, அடுத்தநாள் நோன்பு நோற்பது, வீடுகளை அலங்கரிப்பது, விஷேச உணவுகளை படைப்பது என்று அந்த பிறையின் இரவிலும் பகலிலும் இவர்கள் செய்கின்ற அத்தனை விஷயங்களும் மார்க்கத்தில் காட்டித்தரப்படாத வழிமுறைகள் வழி
கேடுகள் ஆகும்.

பாராஅத் இரவுத் தொழுகை என்பது புதிதாக உருவாக்கப்பட்டது தான். பைத்துல் முகத்தஸில் எப்போது உருவானது என்பதை அபூஷாமா அவர்கள் கீழ்வருமாறு எழுதுகிறார்கள். பராஅத் தொழுகை உண்டானதற்கு வரலாற்று, பின்னனி என்னவெனில் ஹிஜ்ரி 448ல் இருந்துதான் இது துவங்கியது. இப்னு அபில் ஹம்ரா என்ற அழகிய முறையில் கிராஅத் ஓதும் ஒரு மனிதர் ஷஃபான் மாதம் நடு இரவில் பைதுல் முகத்தஸில் தொழுதார். அவருக்கு பின்னால் ஒரு வருக்கு பின் ஒருவராக கூடினர் அவர் தொழுகையை முடித்து பார்க்கை யில் மிகப்பெரும் ஜமாஅத்தில் அவர் இருந்தார் என்ற ஒரு சுருக்கமான வரலாறும் உண்டு. நூல் : அல்பாஇஸு அலா இன்காரில் பிதஇ
இவர்கள் பராஅத் இரவு என்றும் அந்த நாளில் பல விஷேச வழிபாடு கள் செய்ய வேண்டும் எனவும் எந்த ஹதீஸ்களை ஆதாரமாக காண்பிக்கின்றார்களோ அவைகள் அத்தனையும் பலவீனமானவை. இவர்கள் ஷஃபான் மாதத்தின் சிறப்புகள் குறித்து சொல்லுகின்ற பல ஹதீஸ்கள் பலவீனமானவை என்பதோடு பல ஹதீஸ்கள் இட்டுக்கட்டப் பட்டவையாகவும் உள்ளன. அவர்கள் சொல்லுகின்ற ஹதீஸ்களைப் பார்ப்போம்.

யா அல்லாஹ் ரஜப் மற்றும் ஷஃபான் மாதங்களில் எங்களுக்கு அருள் செய் மேலும் எங்களை ரமலான் மாதத்தினை அடையச் செய்.
நூல் : அஹ்மத்

ஷஃபான் மாதத்தின் சிறப்பு ஏனைய நபிமார்களில் எனக்குள்ள சிறப்பை போன்றதாகும்.
தத்கிரத்துல் மவ்ளூஆத்

ஷஃபான் மாதத்தின் நடு இரவைஅடைந்தால் அதன் இரவில் தொழுங்கள், மேலும் அதன் பகலில் நோன்புவையுங்கள்.
இப்னுமாஜா, அல்ஃபவாயிதுல் மஜ்மூஆ)

ஐந்து இரவுகள் உண்டு அதில் ஒரு போதும் துஆ மறுக்கப்படாது. ரஜப் மாதத்தின் முதல் இரவு, ஷஃபான் மாதத்தின் நடு இரவு, ஜும்ஆ தினத்தின் இரவு, இரு பெருநாட்களின் இரவுகள். (ஸில்ஸிலத்துல் அஹாதீஸ் அள்ளயீஃபா)

ஜீப்ரில்(அலை) அவர்கள் என்னிடம் வந்தார்கள். ஷஃபான் மாதத்தின் இந்த நடு இரவில் கல்ப் கோத்திரத்தின் ஆட்டின் ரோமங்கள் எண்ணிக்கையில் மனிதர்களை அல்லாஹ் நரகில் இருந்து விடுவிக்கின்றான் எனக் கூறினார்கள்.(இப்னுமாஜா, அல்ஃபவாயிதுல் மஜ்மூஆ)

அலியே! யார் ஒருவர் ஷஃபான் மாதத்தின் நடு இரவில் ஆயிரம் முறை குல்ஹுவல்லாஹ் (இக்லாஸ் அத்தியாயம்) ஓதி நூறு ரக் அத்கள் தொழுகின்றாரோ அந்த இரவில் அவர் வேண்டுகின்ற அத்தனை தேவைகளையும் அல்லாஹ் பூர்த்தி செய்கின்றான். (அல்மனாருல் முனீஃப்)

யார் ஒருவர் ஷஃபான் மாதத்தின் நடு இரவில் முன்னூறு ரக்அத்கள் (மற்றொரு அறிவிப்பில் பனிரெண்டு ரக்அத்கள்) ஒவ்வொரு ரக்அத்திலும் முப்பது முறை குல்ஹுவல்லாஹ் ஓதுகின்றாரோ அவர் நரகத்திற்கு விதியாக்கப்பட்ட பத்து நபர்கள் விஷயத்தில் பரிந்து பேசுவார். (தல்கீஸு கித்தாபில் மவ்ளூஆத்)

ஷஃபான் என்பது என்னுடைய மாதமாகும். (ஸில்ஸிலத்துல் அஹாதீஸ் அள்ளயீஃபா)

யார் இரு பெருநாட்களின் இரவுகளையும் ஷஃபான் மாதத்தின் நடு இரவையும் (அமல்களால்) உயிர்ப்பிப்பாரோ உள்ளங்கள் மரணிக்கின்ற நாள் அன்று அவரின் உள்ளம் மரணிக்காது. (மீஸானுல் இஃதிதால்)

யார் ஐந்து இரவுகளை (அமல்களால்) உயிர்பிப்பாரோ அவருக்கு சுவனம் கடமையாகிவிட்டது. தர்வியா இரவு, அரஃபா இரவு, இரு பெருநாட்களின் இரவுகள், ஷஃபான் மாதத்தின் நடு இரவு. (ஸில்ஸிலத்துல் அஹாதீஸ் அள்ளயீஃபா)

ஆக இப்படியாக இவர்கள் மேற்கொள் காட்டுகின்ற அத்தனை ஹதீஸ்களும் பலவீனமானவை மற்றும் இட்டுக்கட்டப்பட்டவை. எனவே ஷஃபான் மாதத்தின் நடு இரவு சம்பந்தமாக எந்த தெளிவான சஹிஹான ஹதீஸ்களும் கிடையாது. அது சம்பந்தமாக வரக்கூடிய அத்தனை ஹதீஸ்களும் பலவீனமானவை மற்றும் இட்டுக்கட்டப்பட்டவை.

அந்த நாளுக்கு மார்க்கத்தில் எந்த பிரத்யேக சிறப்புகளும் இல்லை. அந்த நாட்களில் பிரத்யேகமாக ஓதுவதோ, தொழுவதோ, ஜமாஅத் வைப்பதோ மார்க்கத்தில் சொல்த்தரப்பட்ட ஒன்று அல்ல. எவர்கள் இதனை புரியாமல் பிரத்யேக வழிபாடுகள் அந்த நாட்களில் செய்வார்களோ அவர்கள் அல்லாஹ்வோ அவனின் தூதரோ காட்டித்தராத வழிமுறையை செய்ததற்காக அல்லாஹ்விடம் குற்றம் பிடிக்கப்படுவார்கள் என்பதில் சந்தேகம் கிடையாது. இது குறித்து முற்கால அறிஞர்கள் பதிவு செய்து வைத்துள்ளவை நல்ல தீர்வாக அமையும்.

இமாம் இப்னு வள்ளாஹ் அவர்கள் (மரணம் 286ஹிஜ்ரி) தமது ‘அல்பிதஉ’ (பித்அத்துக்கள்) எனும் நூலில் பதிவு செய்திருப்பது: அப்துர் ரஹ்மான் பின் ஸைத் பின் அஸ்லம்(ரஹ்) அவர்கள் கூறினார்கள்: “நமது ஷைகுகளிலும் மார்க்க அறிஞர்களிலும் ஒருவரும் ஷஃபான் மாத நடு இரவின் பக்கம் திரும்பிப்பார்த்ததை நாம் கண்டதில்லை.

மேலும் மக்ஹுல் அறிவிக்கும் (ஷஃபான் 15 இரவு குறித்த) ஹதீஸை அவர்களில் ஒருவரும் பேச நாம் கண்டதில்லை. மற்ற இரவுகளை விட அந்த இரவுக்கு தனிச்சிறப்பு இருப்பதாக ஒருவரும் கருதவில்லை”

இப்னு அபீஸைத் கூறினார்கள்: “மார்க்க அறிஞர்கள் அதைச் செய்வதில்லை” “ஷஃபான் 15வது இரவின் கூலி லைலத்துல் கத்ர் இரவின் கூலியைப்போன்றதாகும் என்று ஸியாத் அந்நுமைரீ கூறுகின்றார் என இப்னு அபீமுலைகா அவர்களிடம் சொல்லப்பட்டது. அப்போது இப்னு அபீ முலைகா அவர்கள், அவ்வாறு அவர் சொல்லும் போது என்கையில் தடியிருந்தால் அதன் மூலம் அவரை அடிப்பேன் என்று கூறினார்கள். ஸியாத் தீர்ப்பளிப்பவராக இருந்தார்” (பார்க்க : ‘அல்பிதஉ’ அசர் எண் 106,107)

இந்த தகவல்களையும் இன்னபிற ஆதாரங்களையும் வைத்து ஷாஃபிஈ மத்ஹபின் சிறப்புக்குரிய முற்கால அறிஞர்களில் ஒருவரான “அபூஷாமா அஷ்ஷாஃபிஈ” அவர்கள் ஷஃபான் 15ம் இரவில் நடைபெறுபவற்றை குறை கூறியுள்ளார்கள். (பார்க்க:அபூஷாமா அவர்களின், ‘அல்பாயிஸு அலா இன்காரில் பிதஇ’ எனும் நூல்)
சில அறிஞர்கள் ஷஃபான் 15ம் இரவு பற்றிய வேறுசில ஹதீஸ்கள் பலவீன மானவையாக இருந்தாலும் பல வழிகளில் அறிவிக்கப்படுவதால் ஏற்கத்தக்கவை என்ற நிலையை அடைவதாக கூறுகின்றனர்.

அடிப்படையில் லைலத்துல் கத்ருக்குஉரிய சிறப்பை இதில் கூறப்படுவதால் இக்கூற்று ஏற்புடையதல்ல. ஒரு வேளை இக்கூற்று சரி என்று வைத்துக் கொண்டால் கூட இன்றைக்கு நடைபெறும் பித்அத்களுக்கும் ஒன்று கூடல்களுக்கும் ஆதாரமாக ஆகாது. தனிப்பட்ட முறையில் அல்லாஹ்விடம் துஆ செய்வதற்கு வேண்டுமானால் ஆதாரமாக அமையும் என்று இக்கூற்றுக்குரியவர்கள் வாதிக்கலாம்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடியதை விட்டு சந்தேகத்துக்கு அப்பாற்பட்டதை எடுத்துக்கொள்! நூற்கள் : திர்மிதி, நஸாயீ, அஹ்மத்

நன்றி: - மதார்ஷா ஃபிர்தவ்ஸி
அல்-ஜன்னத் மாத இதழ் – ஜுன் 2013

வியாழன், 20 ஜூன், 2013

ZAKATH

ZAKATH:

It is permissible to give the Zakat to deserving relatives. The Prophet peace be upon him said, "Your relatives deserve more your goodness" But it is not allowed to give Zakat to one's own children, grand-children or parents and grand-parents. The husband and wife also cannot give Zakat to each other. Because it is your duty to spend on these relatives like you spend on your own needs. You cannot give Zakat to your own self, similarly you cannot give Zakat to these relatives who come under the category of dependents.

However, other non-dependent relatives such as brothers, sisters, uncles, aunts, cousins, nephews, etc., can receive the Zakat if they are poor and need some financial help. The person who gives the Zakat must make an intention that the amount he/she is giving is for the purpose of Zakat, but the recipient does not have to be informed about it. It is better to give the charity to an individual in a respectful manner without hurting his/her dignity. If you have some relatives who need your help, you should help them from Zakat or from some other Sadaqat.

You may give them the money yourself quietly or you may give them through some other indirect ways. Allah says in the Qur'an "If you disclose your charity, it is well, but if you conceal it and make it reach to those who are really in need that is best for you. It will remove from you some of your sins and Allah is well-acquainted with what you do." (Al-Baqarah 2:271)

Allah subhanahu wa ta'ala has explained eight categories for the distribution of the Zakat funds. These are:
1. The poor who have some money but not enough for their basic needs.

2. The destitute or people who lost their means of livelihood.

3. The Zakat collectors or Zakat collection agencies who may need some funds to spend on the collection and distribution of the Zakat funds.

4. New Muslims or those whose hearts need to be reconciled to Islam.

5. To free the slaves or help the prisoners or their families.
6. People who are under heavy debt and need help to recover.

7. The travelers who may need some help to reach to their destination or the foreign students who cannot receive funds from their homes to complete their studies.

8. In the cause of Allah, such as Da'wah etc.

In fact it is superior to give Zakah to one's needy relatives as this is also a means of maintaining family ties.

ALLAH KNOWS THE BEST.

புதன், 12 செப்டம்பர், 2012

கூடங்குளம் அணுஉலை விவகாரம்: தமிழக மக்கள் அறியவேண்டிய உண்மைகள்!

கூடங்குளம் அணுஉலை விவகாரம்: தமிழக மக்கள் அறியவேண்டிய உண்மைகள்!


கூடங்குளம் அணுஉலைக்கு எதிராகப் போராடும் மக்களையும், உதயகுமார் உள்ளிட்ட வழிநடத்தும் மக்கள் போராளிகளையும் தேசத்துரோகிகளாகவும், தமிழகத்தில் தற்போது நிலவிவரும் மின்தடைக்கு இவர்கள்தான் காரணம் எனவும், இவர்களை சுட்டுக் கொன்றுவிட்டால் பிரச்சனைகள் தீர்ந்துவிடும் எனவும், அதன்பிறகு கூடங்குளத்தில் பணிகள் தொடங்கப்பட்டு தமிழகமே மின்வெட்டு இருளிலிருந்து மீண்டுவிடும் என்பதுபோலவும் ஒரு "மூட நம்பிக்கை' நிலவிக் கொண்டிருக்கிறது.


அனைவரும் ஓர் உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். தமிழகத்தில் தற்போது நிலவிவரும் மின்வெட்டுக்கும், கூடங்குளம் போராட்டங்களுக்கு துளியும் தொடர்பு இல்லை. இது இந்திரா காந்தி, எம்.ஜி.ஆர். காலத்திலிருந்தே சிறிதும் பெரிதுமாக நடைபெற்று வரும் ஒரு நெடிய போராட்டமாகும். கடந்த ஒரு வருடமாக இப்போராட்டம் மக்கள் எழுச்சிமிகு தொடர் போராட்டமாக மாறியிருக்கிறது. அதற்கு என்ன காரணம்?




வாழ்வுரிமை
கூடங்குளம் அணுஉலையிலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்குள் 35 ஆயிரம் மக்களும், 5 கி.மீ. சுற்றளவுக்குள் ஒரு லட்சம் மக்களும் வாழ்கிறார்கள். அம்மக்களின் வாழ்வுரிமைப் போராட்டம் என்பது தென்தமிழகம், கேரளா மற்றும் அண்டை நாடான இலங்கை உள்ளிட்ட பகுதிகளில் வாழும் கோடிக்கணக்கான மக்களின் உயிர் பாதுகாப்பு தொடர்பானது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
நாம் வசிக்கும் ஊருக்கு அருகில் அணுஉலை அமைக்கப்பட்டால், அதன் ஆபத்துகளை அறிந்தபிறகு அதை நாம் அனுமதிப்போமா? எதிர்ப்போமா? என்பதை தமிழக மக்கள் சிந்திக்க வேண்டும்

.
ஜப்பானும் இந்தியாவும்
ஜப்பானில் கடந்த 11.03.2011 அன்று ஏற்பட்ட பூகம்பத்தில் "புகுஷிமா அணுஉலை' பாதிக்கப்பட்டு கதிர்வீச்சு பரவியது. அறிவியல் தொழில்நுட்பத்தில் உயர்ந்த இடத்தில் இருக்கும் ஜப்பானாலேயே இதைத் தடுக்க முடியவில்லை. சுமார் 20 ஆயிரம் ஜப்பானியர்கள் இறந்திருக்கலாம் என்றும், அதை ஜப்பானிய அரசு மறைப்பதாகவும் சர்வதேச நாடுகள் குற்றம்சாட்டுகின்றன.
அணுஉலை கசிவை, விபத்தை ஜப்பான் போன்ற வளர்ந்த - வல்லமை மிக்க நாடுகளாலேயே தடுக்க முடியவில்லை எனில், இந்தியா போன்ற தேசங்களால் என்ன செய்ய முடியும்? தானே புயலால் ஏற்பட்ட சேதத்திற்கு முதலுதவி செய்யவே நமக்கு ஒரு வாரம் தேவைப்படுகிறது. அணுஉலை வெடித்தால், நமது அரசின் மீட்பு நிலை எப்படி இருக்கும் என்பதை மனசாட்சியோடு சிந்தித்துப் பார்க்க வேண்டும்.


 
14000 கோடியா? உயிர்களா?
14000 கோடிகளை முதலீடு செய்து அணுஉலை கட்டிய பிறகு இப்போது அதை எதிர்ப்பது நியாயமா? என சிலர் கேட்கிறார்கள். இந்த அணுஉலை அமைக்கப்பட்ட 1980களில் இதுகுறித்த விழிப்புணர்வு யாருக்கும் இல்லை. நம் பகுதிகளில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகப் போகிறது, நமக்கெல்லாம் வேலைகளும், சலுகைகளும் கிடைக்கப் போகிறது என அரசின் ஏமாற்று பிரச்சாரங்களை அம்மக்கள் நம்பியிருந்தனர்.
இதுகுறித்து உதயகுமார் உள்ளிட்ட பலர் அப்போது எச்சரிக்கை துண்டுப் பிரசுரங்களை வினியோகித்தபோது அதை அம்மக்கள் எதிர்த்தனர். ஜப்பான் - புகுஷிமா அணுஉலை விபத்துக்குப் பிறகே அப்பகுதி மக்கள் தங்களுக்கு நேரப்போகும் அபாயங்களை உணர்ந்தனர். அதன்பிறகே கடந்த ஒரு வருடமாக தொடர் போராட்டங்களை மக்கள் நடத்திவருகின்றனர். உதயகுமார், புஷ்பராயன், ஏசுராஜ் போன்ற வழிநடத்தும் போராளிகளே தடுத்தாலும், அம்மக்கள் போராட்டங்களை கைவிடப் போவதில்லை என்பதே உண்மை. 14000 கோடி ரூபாய் வீணாகிறதே... என கவலைப்படும் "நல்லவர்கள் - தேசபக்தர்கள்' ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். உங்கள் மகளுக்கு ஒரு மணமகனை நிச்சயம் செய்து, திருமணம் ஓராண்டுக்குப் பிறகு நடத்தப்படும் என முடிவெடுக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். திருமணம் நெருங்கும் தருணத்தில், மணமகனுக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதாகத் தெரியவருகிறது. அப்போது நிச்சயத்தை காரணம் காட்டி திருமணத்தை நடத்துவீர்களா? அல்லது ரத்து செய்வீர்களா? இதற்கு நீங்கள் தரும் பதில்தான் கூடங்குளம் போராட்டக்காரர்களின் கேள்விகளுக்கும் பொருந்தும்.


அணுஉலை மூலம் அதிக மின்சாரம் கிடைக்குமா?
இந்தியாவில் நிறுவப்பட்டுள்ள மின் நிலையங்களில் நிலக்கரி, வாயு, எண்ணெய் போன்றவற்றை உள்ளடக்கிய அனல்மின் நிலையங்களிலிருந்து 65.10 சதவீதமும், புனல்மின் நிலையங்களிலிருந்து 21.22 சதவீதமும், சூரிய ஒளி, காற்றாலை போன்றவற்றிலிருந்து 11.05 சதவீதமும் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. அதேசமயம், அணுஉலைகளி-ருந்து மொத்தமே 2.36 சதவீத மின்சாரத்தை மட்டுமே பெறப்படுகிறது.
கூடங்குளத்தில் அணுஉலை இயக்கப்பட்டால் மொத்தமாக 15 நிமிடங்களுக்குத் தேவையான மின்சாரம் மட்டுமே கிடைக்கும். இந்த உண்மைகளை மத்திய மாநில அரசுகள் மறைக்கின்றன.
மின்சார உற்பத்தியைப் பெருக்க அணுஉலைகளுக்கு பதிலாக கடல் அலை, நதிகள், அருவிகள், காற்றாலை, சூரிய ஒளி ஆகிய இயற்கை துறைகளிலிருந்தும் - தொழில்நுட்பங்களிலிருந்தும் தயாரிக்க முடியும். அதை அரசு ஏன் செய்ய மறுக்கிறது?
அறிவியல் தொழில்நுட்பத் துறையில் வளர்ந்த நாடுகளான ஜெர்மனி போன்ற பல நாடுகள் கூடங்குளத்தில் இருப்பது போன்ற அணுஉலைகளை தங்கள் நாட்டில் அனுமதிப்பதில்லை. அமெரிக்காவும், ஜப்பானும் புதிதாக அணுஉலைகளை தங்கள் நாடுகளில் நிறுவ தடை விதித்துவிட்டன.
உலக யுரேனியத்தில் 23 சதவீதத்தை தன்னகத்தே வைத்திருக்கும் ஆஸ்திரேலியா, தனது நாட்டில் இதுவரை ஒரு அணுஉலையைக் கூட கட்டவில்லை.
தற்போது ரஷ்யாவின் துணையோடு கூடங்குளத்தில் அமைந்துள்ள அணுஉலை என்பது வி.வி.ஐ.ஆர். வகையைச் சார்ந்ததாகும். இந்த வகை அணுஉலைகள் கடற்கரைப் பகுதிகளில் இதுவரை அமைக்கப்பட்டதில்லை. ரஷ்ய பொறியாளர்களுக்கு இதில் முன் அனுபவமும் இல்லை. அதைவிட கவனிக்கத்தக்கது, இந்த வகை அணுஉலைகளின் குளிர்விக்கும் கலன்கள் முதல்முறையாக கடல்நீரைக் கொண்டு பரிசோதிக்க இருக்கின்றன.
நாம் கேட்பது என்னவெனில், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட மக்கள் என்ன, பரிசோதனை எலிகளா? உலகிலேயே இவர்கள்தான் ஊருக்கு இளைத்தவர்களா?
ஜப்பானில் புகுஷிமா அணுஉலை விபத்து நடந்தபிறகு, ரஷ்ய அணுஉலைகளின் தரத்தை ஆராய ஒரு குழுவை அமைத்தார் ரஷ்ய ஜனாதிபதி திமித்ரி மெத்வதேவ். அக்குழு, "சக்திவாய்ந்த புகுஷிமா ஜப்பானிய அணுஉலை விபத்துகளைத் தாக்குப்பிடிக்கும் அளவுக்கான வலிமை ரஷ்ய அணுஉலைகளுக்கு இல்லை' என அறிக்கை சமர்ப்பித்து விட்டது.
ரஷ்யாவில் "செர்னோபிலில்' தான் 1986 ஜூன் மாதத்தில் கதிர்வீச்சு வெளியேறி 30 கிலோ மீட்டர் சுற்றளவில் வாழ்ந்த மக்கள் பாதிக்கப்பட்டார்கள். இதில் 9 முதல் 10 லட்சம் பேர் வரை உயிரிழந்ததாக கூறப்பட்டது. இது ஹிரோஷிமா, நாகசாகியில் அமெரிக்கா வீசிய அணுகுண்டுகளை விட நூறு மடங்கு ஆபத்துகளை ஏற்படுத்தியது.
ரஷ்யாவின் துணையோடு அமைக்கப்பட்டுள்ள கூடங்குளம் அணுஉலைகள், புயல், சுனாமி, பூகம்பம் ஏற்படும் வாய்ப்புள்ள புவிக்கோட்டில் அமைந்துள்ளதை நினைவில் கொள்ளவேண்டும்.



தேசத்துரோகிகள் யார்?
கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த அணுஉலைகள் முதலில் கேரளாவில்தான் அமைக்க திட்டமிடப்பட்டன. கேரள அரசும், மக்களும் விழித்துக் கொண்டதால் அது தமிழகத்தின் தலையில் கட்டப்பட்டுள்ளது.
"அணுஉலைகளை எங்கள் மாநிலத்தில் அனுமதிக்க மாட்டோம்' என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துவிட்டார்.
மலையாளிகளுக்கும், வங்காளிகளுக்கும் உள்ள சமூகப் பொறுப்புணர்வு தமிழர்களுக்கு இல்லையா? உதயகுமார் போன்றவர்கள் தேசத்துரோகிகள் என்றால் கேரள, மேற்குவங்க அரசியல் தலைவர்கள் எல்லாம் யார்?
அமெரிக்கா - ரஷ்யாவின் செல்லப் பிள்ளைகளான மன்மோகன் சிங்கும், மான்டேக் சிங் அலுவாலியாகவும் யார்? மக்களுக்காகப் போராடும் உண்மையான தலைவர்களை எதிர்கால வரலாறு விளக்கத்தான் போகிறது.
அனைவரும் மதிக்கும் அப்துல் கலாம், கூடங்குளம் அணுஉலையை ஆதரிக்கிறாரே...? எனலாம்.
அப்துல் கலாம் ஒரு அரசாங்க பிரதிநிதி. அவர் ஒரு ஏவுகணை விஞ்ஞானி தானே தவிர அணு விஞ்ஞானி அல்ல. அவரை நாமும் மதிக்கிறோம். ஆனால் தினமும் இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்படும் தமிழக மீனவர்களுக்காகவோ, தீண்டாமையால் அவதிப்படும் தலித்துகளுக்காகவோ, கலவரங்களால் பாதிக்கப்படும் சிறுபான்மையினர்களுக்காகவோ என்றைக்காவது ஐயா அப்துல் கலாம் குரல் கொடுத்திருக்கிறாரா? என்பதையும் கேள்விகளாக முன்வைக்கிறோம்.
காந்தியின் அகிம்சை வழிப் போராட்டத்தை வரவேற்றவர்கள் கூட நேதாஜியின் நியாயங்களையும் ஏற்றார்கள் என்பதை "அறிவுஜீவிகள்' புரிந்துகொள்ள வேண்டும்.
அப்துல் கலாம் அவர்கள் இவ்விஷயத்தில் மக்களின் பக்கம் நிற்காமல் அரசு பக்கம் நிற்பது துரதிர்ஷ்டவசமானது, வருந்தத்தக்கது.


அணுமின் நிலையங்களின் உண்மை நிலை
இதுவரை இந்தியாவில் அமைக்கப்பட்ட அணுஉலைகள் எதுவும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டவில்லை. அவற்றைப் பாதுகாக்கவும், பராமரிக்கவும்தான் செலவுகள் பன்மடங்காகின்றன.
இன்னும் பல புதிய அணுஉலைகளைக் கட்டினாலும், 2050ல் கூட அணுஉலைகளின் மூலம் 5 சதவீத மின்தேவையைக் கூட எட்ட முடியாது என்பதே உண்மை.
உண்மையில் அணுஉலைகளில் மின்சாரம் தயாரிக்கப்படுகிறதா? அல்லது மின்சாரம் என்ற பெயரில் அணுகுண்டுகள் தயாரிக்கப்படுகிறதா? என்பதை அரசுதான் விளக்க வேண்டும்.


மக்களே... சிந்திப்பீர்...
அணுஉலைகளில் கசிவு என்பது தவிர்க்கவே முடியாததாகும். அவற்றின் கழிவுகளைப் பாதுகாப்பதும், பராமரிப்பதும் அவ்வளவு எளிதல்ல. அது சேதமடைந்தால் அணுகுண்டுகளினால் ஏற்படும் பேராபத்தை விட மோசமாக இருக்கும்.
அப்பகுதிகளில் கடல்நீர் பாதிக்கப்பட்டு மீன் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்கள் அழியும். உணவு, குடிநீர், காற்று மாசுபடும். சுற்றுச்சூழல் கெடும். புற்றுநோய் பரவுவது தவிர்க்க முடியாதது என்றெல்லாம் உலக அனுபவங்கள் கூறுகின்றன. விஞ்ஞானிகளும் எச்சரிக்கிறார்கள்.
1984ல் மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் "யூனியன் கார்பைட்' என்ற அமெரிக்க நிறுவனத்தில் விஷவாயு கசிந்ததில் ஆயிரக்கணக்கானோர் இறந்ததையும், இன்றுவரை அங்கு குழந்தைகள் ஊனமுற்றும், புற்றுநோயோடும் பிறப்பதையும் பார்க்கும் போது நெஞ்சம் வெடிக்கிறது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான இழப்பீடுகள் இல்லை. இந்திய அரசு நம் மக்களை மறந்துவிட்டு, அமெரிக்க கம்பெனிக்கு ஆதரவாக இன்றுவரை செயல்படுவதைப் பார்த்தபிறகும், நீங்கள் கூடங்குளம் போராட்டத்தை எதிர்த்தால் அது உங்கள் மனசாட்சியைக் கொல்வதாகவே இருக்கும்.
நமக்கு மின்சாரம் வேண்டும்! ஆனால் மக்களை அழித்து சுடுகாட்டில் விளக்குகள் எரியவேண்டாம்!

வெளியீடு
மனிதநேய மக்கள் கட்சி.

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

நோன்பும், அல் குர்ஆனும்

நோன்பும், அல் குர்ஆனும் 


ரமலான் மாதம் குர்ஆன் அருளப்பட்ட மாதம்:
‘ரமழான் மாதம் எத்தகையது என்றால் மனிதர்களுக்கு நேர்வழி காட்டக்கூடிய, சத்தியத்தை அசத்தியத்தை பிரித்துக் காட்டும் அல் குர்ஆன் அருளப் பெற்றது, உங்களில் எவர் அம்மாதத்தை அடைவாரோ அவர் அம்மாதத்தில் நோன்பு நோற்கட்டும்’ (அல்பகரா 2: 185).

அபூ உமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
குர்ஆனை ஓதுங்கள். திண்ணமாக தன்னை ஓதக்கூடியவர்களுக்கு மறுமை நாளில் அது பரிந்துரை செய்யக் கூடியதாக வரும். (முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
குர்ஆனை திறமையாகக்கற்றுத்தேர்ந்தவர், நல்ல கண்ணியமிக்க எழுத்தர் (மலக்கு) களுடன் இருப்பார். எவர் குர்ஆனை திக்கித் திக்கி ஓதுகின்றாரோ, மேலும் அவருக்கு அது கடினமாகவும் இருக்கின்றதோ அவருக்கு இரட்டைக் கூலி உண்டு.
(புகாரி, முஸ்லிம்).
ஒரு கூலி ஓதியதற்காக. மற்றொன்று சிரமத்துடன் அதை ஓதியதற்காக.

அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
எவர் குர்ஆனிலிருந்து ஒரே ஒரு எழுத்தை ஓதுகின்றாரோ அதற்காக அவருக்கு ஒரு நன்மை கிடைக்கின்றது. அந்த ஒரு நன்மை அதைப் போன்று பத்து நன்மைகளாக அதிகரிக்கப்படுகின்றது. அலிஃப்- லாம்-மீம் என்பதை நான் ஒரு எழுத்து என்று சொல்ல மாட்டேன். ஆனால் அலிஃப் ஒரு எழுத்து. லாம் ஒரு எழுத்து. மீம் ஒரு எழுத்து|.(திர்மிதி)

‘நோன்பும், அல் குர்ஆனும், மறுமையில் ஓர் அடியானுக்காக பரிந்து பேசும். நோன்பு கூறும், ‘நான் இவ்வடியானை உணவை விட்டும், இச்சைகளை விட்டும் தடுத்திருந்தேன் இவன் விஷயத்தில் பரிந்துரைப்பாயாக’! அல் குர்ஆன் கூறும் ‘நான் இவனை இரவில் தூங்கவிடாமல் தடுத்திருந்தேன் எனவே இவனுக்கு பரிந்துரை செய்வாயாக’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்).

‘ரமழானின் ஒவ்வொரு இரவிலும் ஜிப்ரீல் (அலை) நபி (ஸல்) அவர்களை சந்தித்து குர்ஆனை ஓதிக்காட்டுவார்கள்’ (புஹாரி).



இச்செய்திகள் குர்ஆனுக்கும் ரமழானுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை தெளிவுபடுத்துகிறது. குர்ஆனுடனான தொடர்பை குறைத்துக்கொண்ட அதிகமான முஸ்லிம்கள் இச் சந்தர்ப்பத்திலிருந்தாவது குர்ஆனை படிப்பதன் மூலம், அதனை ஆராய்வதன் மூலம், அதன் வழி நடப்பதன் மூலம், வாழ்க்கையின் எல்லா சந்தர்ப்பங்களிலும் அதை தீர்வாக ஆக்கிக் கொள்வதன் மூலம் அதன் பக்கம் நெருக்கத்தை அதிகப்படித்துக் கொள்வதற்கு முன்வரவேண்டும்.

சனி, 10 மார்ச், 2012

ஸலவாத்துன்னாரிய்யா


ஸலவாத்துன்னாரிய்யா

Post image for ஸலவாத்துன்னாரிய்யா
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் அருமை ஸஹாபாக்கள் உங்களுக்கு நாங்கள் எப்படி ஸலவாத் கூறுவதுஎன்று கேட்டபோது, நபி அவர்கள் ஸலவாத்கூறும் முறைகளை நமக்குத் தெளிவாக கற்றுத் தந்துள்ளனர். அவர்கள் எவற்றை ஸலவாத்என்று கற்றுத் தந்தார்களோ அதை விடுத்து நாமாகப் புதிய ஸலவாத்களை உருவாக்கிக் கொண்டால் அது ஸலவாத் ஆக முடியாது. மாறாக பித்அத்ஆக அவை கருதப்படும். இதற்கு உதாரணமாக இப்னு அபீ ஜைதுஎன்ற அறிஞர் வர்ஹம் முஹம்மதன் வஆல முஹம்மத்என்று ஒரு புதிய ஸலவாத்தை அவராக தயாரித்தபோது அன்றைய அறிஞர் உலகம் அவரை வன்மையாகக் கண்டித்து அவர் மார்க்கத்தை அறியாதவர்என்றும் முடிவு கட்டியது.
நபி அவர்கள் ஸலவாத் எப்படிக் கூறுவது என்று நமக்கு தெளிவாக கூறியிருக்கும் போது புதிதாக ஒரு ஸலவாத்தை உருவாக்குவது பித்அத் ஆகும்என்றும் அன்றைய அறிஞர் பெருமக்கள் அவரைக் கண்டித்துள்ளனர். திர்மிதிஎன்ற ஹதீஸ் நூலுக்கு விரிவுரை எழுதிய இமாம் அபூபக்ரு இப்னுல் அரபி(ரஹ்) அவர்கள் திர்மிதியின் விரிவுரையில் இதனைக் குறிப்பிடுகிறார்கள். இந்த அடிப்படையை நாம் புரிந்து கொண்ட பின் ஸலவாத்துன்னாரிய்யாஎன்று நம்மவரிடையே பிரபல்யம் அடைந்துள்ள ஸலவாத்தை அலசுவோம்.
இந்த ஸலவாத்துன்னாரியாஎன்ற ஸலவாத்தை நபி அவர்கள் நமக்குக் கற்றுத்தரவில்லை. அருமை ஸஹாபாக்கள் இதை ஓதியதுமில்லை. நாற்பெரும் இமாம்களின் காலத்திலும் இந்த ஸலவாத் இருந்ததில்லை.
மிகமிகப் பிற்காலத்தில் வாழ்ந்தவர்கள் தான் இந்த ஸலவாத்தைத் தயார் செய்தனர். நபி அவர்கள் கற்றுத்தந்துள்ள எண்ணற்ற ஸலவாத்துக்கள் இருக்க, இப்படிப் பிற்காலத்தில் சிலரால் உருவாக்கப்பட்ட ஸலவாத்துன்னாரியாமக்களிடம் நன்கு அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது. இதைச் சொல்வதால் ஸலவாத்தின் நன்மை நிச்சயம் கிடைக்காது. இதன் பின்னனியில் ஏராளமான பித்அத்கள் வேறு நடந்து கொண்டுள்ளன. இதை 4444 தடவை ஓத வேண்டுமாம். இந்த எண்ணிக்கை நிர்ணயம் செய்தவர் யார்? அல்லாஹ்வுக்கும் அவனது தூதர் அவர்களுக்கும் தவிர இப்படி எண்ணிக்கைணை நிர்ணயிக்கும் உரிமை எவருக்கும் கிடையாது.
இந்த ஸலவாத்ஓதுவதால் செல்வம் பெருகும் நோய் நீங்கும் என்ற குருட்டு நம்பிக்கை வேறு! இந்த தீனைவைத்து சம்பாதிப்பவர்கள் தான் திட்டமிட்டு உருவாக்கினார்கள் என்பதை சிந்தனை உள்ள எவரும் உணரலாம். 4444 என்று பெரும் எண்ணிக்கைணைச் சொன்னால் மக்கள் தானாக அவ்வளவு பெரும் எண்ணிக்கையை ஓத இயலாது. அதற்கென்று ஓதத் தெரிந்தவர்கள் அழைப்பார்கள் அதற்கு சில்லரைகள் கிடைக்கும் என்ற நோக்கத்தைத் தவிர வேறு நோக்கம் எதுவும் இருக்க முடியாது.
இத்தகைய பித்அத்தான சொற்றொடர்களைச் சொல்வதால் நன்மை கிடைப்பதற்கு பதிலாக தீமைதான் ஏற்படும். ஏனெனில் நபி அவர்கள் எல்லா பித்அத்களும் வழிகேடு என்று சொல்லி இருக்கின்றார்கள். (புகாரி)
இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஸலவாத்துன்னாரிய்யாவின் பொருளும் குர்ஆன், ஹதீதுகளின் வழிகாட்டுதலுக்கு முரண்படுகின்றது.
கிறித்தவர்கள் ஈஸாவை வரம்பு மீறிப் புகழ்ந்தது போல் என்னை நீங்கள் வரம்பு மீறிப் புகழாதீர்கள். (நூல்கள்: புகாரி, தாரமி, அஹ்மத், ஷமாயிலெ திர்மிதீ) என்ற நபி அவர்களின் எச்சரிக்கைக்கு மாற்றமாகவே இதன் பொருள் அமைந்துள்ளது.
இனி ஸலவாத்துன்னாரியாவின் பொருளை பார்ப்போம்

யா அல்லாஹ்! எவர் மூலம் சிக்கல்கள் அவிழ்ந்து விடுமோ; எவர் மூலம் கஷ்டங்கள்   அகன்று விடுமோ; எவர் மூலம் தேவைகள் நிறைவு செய்யப்படுமோ; எவர் மூலம் ஆசைகள்   பூர்த்தி செய்யப் படுமோ; எவருடைய திருமுகத்தின் மூலம் மேகத்திலிருந்து மழை   பெறப்படுமோ அந்த எங்கள் தலைவர் மீது முழுமையாக நீ அருள் புரிவாயாக!இது தான்   ஸலவாத்துன்னாரிய்யாவின் பொருள்.
அல்குர்ஆனையும் நபி மொழிகளையும் ஓரளவு அறிந்தவர்கள் கூட இந்தப் பொருளை ஏற்க மாட்டார்கள்! இதில் சொல்லப்படுகின்ற தன்மைகள் யாவும் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தானது என்று கூறிடுவார்கள்.
நபி(ஸல்லல்லாஹு அலைஹு வஸல்லம்) அவர்கள் மூலம் கஷ்டங்கள் அகன்று விடும்என்று அல்லாஹ்வோ, அவன் திருத் தூதரோ நமக்குச் சொல்லித் தரவில்லை. அல்லாஹ்வின் மூலமாகவே கஷ்டங்கள் விலக முடியும்என்று தான் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் போதனை செய்தார்கள்.
அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கே நான் நன்மை செய்து கொள்ளவோ தீங்கிழைத்துக் கொள்ளவோ சக்தி பெற்றிருக்கவில்லைஎன்று சொல்வீராக! (அல்குர்ஆன் 10 :49)
அல்லாஹ் இப்படித்தான் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை கூறச் சொல்கிறான். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களும் அவ்வாறே கூறினார்கள். நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் 23 ஆண்டு கால பிரச்சசார வாழ்க்கையில் அவர்கள் பட்ட கஷ்டங்களே இதற்குச் சரியான சான்றுகளாகும். எத்தனை முறை அடிக்கப்பட்டிருக்கிறார்கள்? பைத்தியம் என்று எள்ளி நகையாடப் பட்டிருக்கிறார்கள்! தாயிப்நகரில் இரத்தம் சிந்தும் அளவுக்கு கல்லால் அடிக்கப்பட்டார்கள்! சொந்த ஊரிலேயே இருக்க முடியாத நிலமைக்கு ஆளாக்கப்பட்டார்கள்! உஹதுப் போர்க் களத்தில் பல்உடைக்கப்பட்டது! இது போன்ற இன்னும் பல கஷ்டங்களுக்கு அவர்களே ஆளானார்கள்.
அவர்களின் அன்புத் தோழர்களில் பலர் இரண்டாகக் கிழிக்கப்பட்டார்கள்! சுடு மணலில் கிடத்தப்பட்டார்கள்! மர்ம ஸ்தானத்தில் அம்பு எய்து கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள்! தூக்கு மேடையிலும் ஏற்றப்பட்டார்கள்! பல போர்க்களங்களில் ஷஹீதாக்கப்பட்டார்கள்! நபி(ஸல்லல்லாஹு அலைஹு வஸல்லம்) அவர்களின் காலத்திலேயே இவ்வளவு கொடுமைகளும் தொடர்ந்தன. இது போன்ற சந்தர்ப்பங்களில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இ தன் மூலமாகக் கஷ்டங்கள் விலகும்என்று கூறிடவில்லை.
தனது பெரிய தந்தை இஸ்லாத்தை ஏற்க வேண்டும்என்ற ஆசை நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு இருந்தது. ஆனால் கடைசி வரை அந்த ஆசை பூர்த்தி செய்யப்படவில்லை ஏன் அபூஜஹல் உட்பட எல்லாக் காபிர்களும் இஸ்லாத்தில் இணைய வேண்டும் என்ற பேராசையும் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு இருந்தது. அதை அல்லாஹ்வே சொல்லிக் காட்டுகிறான். அவர்கள் இந்த (வேத) அறிவிப்பில் ஈமான் கொள்ளவில்லை என்பதற்காக கை சேதப்பட்டு உன்னையே நீர் அழித்துக் கொள்வீர் போலும்’ (அல்குர்ஆன் 18:6) என்று அல்லாஹ் சொல்லிக் காட்டும் அளவுக்கு காபிர்கள் ஈமான் கொள்ள வேண்டும் என்று பேராசை கொண்டிருந்தார்கள். அந்த ஆசையை அல்லாஹ் நிறைவேற்றித் தரவில்லை.
அவர்களின் 23 ஆண்டுகால வாழ்க்கையில் துன்பங்கள் தான் இன்பங்களை விடவும் அதிகமாக இருந்தன. தாங்களே கஷ்டத்திற்கு ஆளாகி நின்ற போது அல்லாஹ்தான் நீக்கக் கூடியவன்என்றே போதித்தார்கள். திருக்குர்ஆனும் பல இடங்களில் இதை மிகத் தெளிவாகவே கூறுகின்றன.
(2:272) (3:128) (6:17) (6:50) (6:66) (7:188) (10:106,107) (11:63) (28:56) (42:52) (49:9) (72:21,22)
ஆகிய வசனங்களை ஒருவர் சிந்தித்தால் இந்த ஸலவாத்துன்னாரிய்யாவின் கருத்தை தவறு என்று புரிந்து கொள்வார். கருத்தின் அடிப்படையிலும் இந்த ஸலவாத்துன்னானரிய்யா தவறாக உள்ளது என்பதால் இதை ஓதுவது கூடாது என்று உணரலாம்.
நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எதை ஸலவாத் என்று சொல்லித் தந்தார்களோ அதை ஓதி நன்மை அடைவோமாக! பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட உலா வருகின்ற பித்அத்தான ஸலவாத்களை விட்டொழிப்போமாக!
முகம்மது அலி, M.A.