சனி, 17 செப்டம்பர், 2011

இஸ்லாம் என்ற இயக்க வெறியில் இதை படியுங்கள்

அஸ்ஸலாமு அலைக்கும்.
 
பாப்புலர் ஃப்ரென்ட் ஆஃப் இந்தியாவும் அதன் அரசியல் கட்சியான எஸ்.டி.பி.ஐ யும் தமிழகத்தில் வளர்ச்சி அடைந்தால் என்ன நிலை??
 அண்மையில்  நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலின் முடிவு எலெக் ஷன் கமிஷனின் வெப் சைட்டில் உள்ளது. அதிகாரப் பூர்வமாக வெளியிடப் பட்ட ஓட்டு எண்ணிக்கை. இதில் முஸ்லிகளின் பிரதிநிதிகள் நாங்கள் தான் என்று மனிதநேய மக்கள் கட்சி, முஸ்லிம் லீஃக் ( முஸ்லிம் லீஃக் என்று ஊரை ஏமாற்றி திமுக சின்னத்தில் நின்று தோல்வி அடைந்தார்கள் )பாப்புலர் ஃப்ரென்ட் ஆஃப்  இந்தியா (SDPI) முதலான கட்சிகள் நின்றன. அவை பெற்ற ஓட்டுக்கள் விவரம்.  நாம் அதில் இருந்து சில விஷயங்களை பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
1)   சேப்பாக்கம்
மமக -55000, திமுக 64000, ஐ.என்.எல்(INL) முஸ்லிம் 1200
2)  ஆம்பூர் 
மமக 60000காங்கிரஸ்  55000
3)  ராமநாதபுரம்  
மமக 66000காங்கிரஸ் 50000,  பீஜேபி 28000, ஐ.என்.எல்  முஸ்லிம் 3600, எம்.என்.பி (SDPI)2700.    ராமநாதபுரத்தில் SDPI நிற்பதாக சொன்னார்கள். ஆனால் அரசாங்க ரிப்போர்ட்டில் பெரோஸ் ஃகான் என்ற பெயர் சுயேச்சை என்றுதான் உள்ளது.
4) சென்னை துறைமுகம்
அதிமுக 54000, திமுக 33600, பீஜேபி 4800, எம்.என்.பி(SDPI) 2200
5) திருப்பூர்
சிபிஎம் 75000, காங்கிரஸ் 37000, பீஜேபி 4400, எம்.என்.பி(SDPI) 2650
6) கோவை தொண்டாமுத்தூர்
அதிமுக 99900, காங்கிரஸ் 46000, பீஜேபி 6000, எம்.என்.பி(SDPI) 4500
7) கடைய நல்லூர்
 எம்.என்.பி(SDPI) 6600,   அதிமுக 81000, காங்கிரஸ் 65000
8) பூம்புஹார்
அதிமுக 86000, பமக 74500, எம்.என்.பி(SDPI) 3000
9) காரைக்கால் டி.ஆர் பட்டிணம்
சுயேச்சை 8860, திமுக 8500, அதிமுக 2100, எம்.என்.பி(SDPI) 243
  
ஒரே ஒரு விஷயம் நாம் அனைவரும் புரிந்து கொள்வது நன்மையானதாக அமையும். மமக சரியில்லை என்று வேறு ஒரு இயக்கத்தை வளர்க்க நினைப்பவர்கள், நம் சமூகத்தின் பலத்தை மறுபடியும் 10 - 20 ஆண்டுகள் செலவு செய்து, அதன் பின்னர் தான் மமக தற்போதுள்ள நிலையை அடைய இயலும். எனவே, இருக்கும் இயக்கங்களில் முன்னணியில் உள்ள மமகவை சரி செய்வது தான் சாலச் சிறந்ததாக அமையும். 
ராமநாதபுரத்தில் உதாரணமாக SDPI வளர்ந்தால் என்ன ஆகும்இன்று 28000 ஓட்டுக்கள் வாங்கியுள்ள பிஜேபியின் வெற்றிக்கே அது வழி வகுக்கும்.  அப்போதும் இந்த இயக்கத்திற்கு(SDPI) நிச்சயம் மலக்குகள் தலைமை நிர்வாகிகளாக இருக்கப் போவதில்லை. யாரேனும் ஒரு தமிழக முஸ்லிம் தான் தலைவராக இருக்கப் போகிறார். அதிமுகவுடனோ, திமுகவுடனோ அல்லது சற்றும் இந்த இருவரின் சிந்தனையில் இருந்து மாறுபடாத தேமுதிகவுடனோ தான் நாம் கூட்டணியாக இருந்து அரசியல் நடத்த இயலும். எனவே மமக, எஸ்டிபிஐ, லீஃக் என்ற பெயரை விட நாம் முஸ்லிம்கள் என்ற ஒரு அடையாளத்துடன் இருப்பது தான் சிறந்ததாக அமையும். அதற்கு இன்று மமக தான் சரியான இயக்கமாக உள்ளது. 
எனவே சமூக ஆர்வலர்கள் இந்த ஜமாத்தை குறைந்த பட்சம் அரசியல் ரீதியாக பலப் படுத்த வேண்டும். இல்லை முடியாது, தமுமுக, மமகவினர் சரியில்லை. அந்த விஷயத்தை அப்படி செய்திருக்கலாம். இந்த விஷயத்தை இப்படி செய்திருக்கலாம். எங்கள் இயக்கம் அது மாதிரி இல்லை. எங்களை வழி நடத்துபவர்கள் வானத்தில் இருந்து குதித்தவர்கள் என்று மனதில் நினைத்துக் கொண்டு செயல் பட்டால், முஸ்லிம் சமூகத்தின் பொருளாதாரத்தை வீணடிப்பதற்கு சமம். 
மேலும் எப்படி சகோ.பீஜேயின் 2004 பிரிவு ஒரு பின்னடைவாக அமைந்ததோ, அது போல் தான் இதுவும் ஒரு பின்னடைவாக அமையும். நம் எதிரி இன்று நம்மை விட பல மடங்கு பலசாலி ஆகிவிட்டான். (அல்லாஹு அக்பர்)  இப்போது தான் நாம் யார் சொன்ன கலிமா சரியென்று போட்டி போட ஆரம்பித்துள்ளோம். அல்லாஹ் காப்பாற்ற வேண்டும். நிச்சயமாக கேரளாவில் இருக்கும் சூழல் தமிழகத்தில் இல்லை. அவர்கள் செய்யும் அரசியலை நாம் இங்கு செய்ய இயலாது. செய்தால் நன்மையாக முடியாது. 
டில்லியின் சூழ்நிலைக்கு ஏற்ப மத்திய அரசில் சில விஷயங்களில் அவர்களுடன் கை கோர்க்கலாம். நிச்சயமாக கேரள மக்களின் தலைமையில் நாம் தமிழகத்தில் இயங்க முடியாது. எப்படி இந்தியாவில் நம் மாநிலத்தில் மட்டும் 2 திராவிட கட்சி தனித் தன்மையாக உள்ளதோ (பெயரளவிலாவது) அது போல் தான் தமிழக முஸ்லிம்களும் இயங்க முடியும்.
இஸ்லாம் என்ற இயக்க வெறியில் இதை படியுங்கள். தமுமுக / மமக இயக்க வெறியில் அல்ல. நம் எண்ணங்களை அல்லாஹ் ஒருவனே நன்கு அறிய முடியும். அதற்கேற்ப நமக்கு நன்மைகள் கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக